விடிந்தால் தீபாவளி !

விய ஆண்டு
ஐப்பசி மாதம் 3ம் நாள்
விடிந்தால் தீபாவளி!

கருமேகம் சூழ்ந்த வானம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
விண்மீன்கள்
குளிர் வாடைக் காற்று
அமாவாசை இரவு
விடிந்தால் தீபாவளி!

விண்ணை முட்டும் வெடி சத்தமில்லை!
வண்ண வண்ணமாய் ஒளி பரப்பும்
பட்டாசு வானவேடிக்கை இல்லை!
கம்பி மத்தாப்பு பிடித்து கொண்டு
கண்சிமிட்டும் சிறார் கூட்டமில்லை!
சாலையை வழிமறித்து
அணுகுண்டுகளை பரிசோதிக்கும்
இளைஞர்கள் இல்லை!
விடிந்தால் தீபாவளி!
 

தள்ளுபடி விலை கண்டு
அசந்து போகும் ஆடவர் கூட்டமில்லை!
நூறு ரூபாய்க்கு இரண்டு சேலை
வாங்க அலைமோதும் பெண்கள் கூட்டமில்லை!
சாலைகளை அலங்கரிக்கும்
கலர், கலரான நீயான் விளக்கு வெளிச்சமில்லை!
விடிந்தால் தீபாவளி !
 

வெள்ளிக்கிழமை இரவு
ஆரவாரமில்லாத சாலைகள்
ஆர்ப்பரிப்பில்லா மக்கள் நடமாட்டம்
சாலையோரம் உதிர்ந்து கிடக்கும் இலைச்சருகுகள்
சருகுகளுடன் ஓடிப்பிடித்து விளையாடி
‘சர சர’ ஒலி எழுப்பும்
மிச்சிகன் ஏரிக்காற்று!
‘Hi , Happy weekend’,  என
புன்னகைக்கும் வயோதிகப் பெண்மணி
ஐந்து நாட்கள்
ஓய்வில்லா வேளையினைத் தொடர்ந்து
வாரவாரம் வரும்
Happy weekend.
இதுதான் அமெரிக்க தீபாவளி!
விடிந்தால் நம்ம ஊரில் தீபாவளி!

நண்பர்கள்,

உறவினர்

 அனைவருக்கும்

 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Advertisements
Posted in Uncategorized | 3 Comments

இலை உதிர் காலம்…

சிகாகோவில் இலை உதிர் காலம் தொடங்கிவிட்டது. வினாடிவினாடியாய் உதிர்கின்ற காலத்துடன் இலைகளும் கைகோர்துக்கொள்ள துவங்கி விட்டது. இலைகள் விடை பெறுவதற்குமுன் வண்ண வண்ணமாய் முகவரி எழுதி உதிர துவங்கி விட்டன. கருப்பு அங்கி அணிந்து முகம் காட்டி சிரிக்கின்ற ரோஜா செடி போல் இளம் சிறார்கள் முகம் மட்டும் காட்டி குதுக்கலிக்க தொடங்கி விட்டனர். இளைஞர்கள் விந்தேர் ஜாக்கேட்டுக்குள் இருந்து கை எடுக்காமல் மெலியதாய் மூச்சு இரைக்க ஹாய் சொன்னார்கள். அரை கால் சட்டையுமாய் ,அரை கை சட்டையுமாய் வலம் வந்தவர்கள் ஜாக்கேட் மாட்டும் கோட்டு ஸ்டாந்டுகளாய் மாற தொடங்கி விட்டார்கள். இலை இளையாய் உதிரும் இலை உதிர் காலத்துடன் இணைந்து கொள்வோம் வாருங்கள்.  
Posted in Uncategorized | 1 Comment